/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காட்டாங்கொளத்துார் ஒன்றிய பகுதிகளில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரிப்பு
/
காட்டாங்கொளத்துார் ஒன்றிய பகுதிகளில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரிப்பு
காட்டாங்கொளத்துார் ஒன்றிய பகுதிகளில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரிப்பு
காட்டாங்கொளத்துார் ஒன்றிய பகுதிகளில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரிப்பு
ADDED : ஏப் 20, 2025 01:45 AM

காட்டாங்கொளத்துார்:காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், பிளாஸ்டிக் பை பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கட்டுப்பாடும், கண்காணிப்பும் இல்லாததால், கடைகள், வணிக நிறுவனங்கள் தாராளமாக பயன்பாட்டில் இறங்கி உள்ளன.
பயன்பாட்டிற்கு பின், குப்பை மேடுகள், ஏரி கரையோரங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகளால், சுற்றுச் சூழல் மாசுபட்டு, இயற்கை வளம் பாழடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், 193.90 ச.கி.மீ., பரப்பில் 39 ஊராட்சிகளுடன் இயங்கி வருகிறது.
குப்பை அள்ளும் வாகனங்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் பற்றாக்குறையால், 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் தெருக்கள், குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளில் மிதக்கின்றன.
கடந்த இரு ஆண்டுளாக பிளாஸ்டிக் பை பயன்பாடு குறித்து, ஒன்றிய அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தாததால், கடைகள், வணிக நிறுவனங்களில் பயன்பாடு தாராளமாகி உள்ளது.
பயன்பாடு முடிந்தவுடன், பிளாஸ்டிக் பை அனைத்தும் குப்பை மேட்டிற்கு வருகின்றன. இதனால், ஊராட்சி தெருக்களில் தேங்கும் குப்பையில், அதிகளவு பிளாஸ்டிக் பைகள் காணப்படுகின்றன.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இயற்கை வளத்தை முற்றிலுமாக பாழ்படுத்தும் பிளாஸ்டிக் பை ஒழிப்பு குறித்தும், மாற்றாக, மஞ்சப் பை பயன்பாடு குறித்தும், அரசால் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பை உபயோகம் தாராள மயமாகி உள்ளது.
அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித ஆய்வும், கண்காணிப்பும் மேற்கொள்ளாததால், இறைச்சி கடைகள், உணவகங்கள், சாலையோர சாப்பாட்டு கடைகள், சில்லறை விற்பனை கடைகள், வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் பையில் வைத்து பொருட்கள் வழங்கப்படுவது, அதிகரித்துள்ளது.
இதனால், அனைத்து குப்பை மேடுகளிலும் பிளாஸ்டிக் பைகளே அதிகம் காணப்படுகின்றன.
இந்த பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு பல மாதங்கள் ஆகும். இதனால், பூமியின் இயற்கை வளம் பாதிக்கப்பட்டு, தாவரங்கள் வளர்வதற்கு இடையூறு ஏற்படும். தவிர, ஏரிகளில் நீர் வாழ் உயிரினங்கள் அழியும். நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும்.
எனவே, ஒன்றிய அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, 39 ஊராட்சிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இவற்றை பயன்படுத்தும் கடைக்காரர்களுக்கு அபராதமும் விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

