/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குழந்தைகள் உரிமை தினம் அரசு பள்ளியில் உறுதிமொழி
/
குழந்தைகள் உரிமை தினம் அரசு பள்ளியில் உறுதிமொழி
ADDED : நவ 21, 2025 03:05 AM

திருப்போரூர்:திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழா, நேற்று கொண்டாடப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழா, கொண்டாடப்பட்டது.
இதில், பள்ளி தலைமை ஆசிரியர் தெமினா கிராணப் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கிருபாகரன் அனைவரையும் வரவேற்றார்.
குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர் ராமச்சந்திரன் பங்கேற்று, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் சமூகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
மேலும், குழந்தைகள் பள்ளி இடைநிற்றலை தவிர்த்து அனைவரும் கல்வி பெறுதல், குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முதுகலை ஆசிரியர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

