/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிளஸ் 1 தமிழ் தேர்வு 215 மாணவர்கள் 'ஆப்சென்ட்'
/
பிளஸ் 1 தமிழ் தேர்வு 215 மாணவர்கள் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 05, 2024 03:53 AM
செங்கல்பட்டு, : செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், 28,139 மாணவ -- மாணவியர் பிளஸ் 1 தேர்வு எழுதினர். 215 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுதும் பிளஸ் 1 தேர்வு நேற்று துவங்கி, 25ம் தேதி வரை நடக்கின்றன.
செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், மொத்தம் 315 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த மையங்களில், பிளஸ் 1 வகுப்பில், 13,315 மாணவியர், 15,040 மாணவர்கள் என, மொத்தம் 28,355 மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, பிளஸ் 1 தமிழ் தேர்வு, நேற்று காலை 8:30 மணிக்கு, மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்தனர். இதில், 13,205 மாணவர்கள், 14,934 மாணவியர் என, மொத்தம் 28,139 பேர் நேற்று தேர்வு எழுதினர்.
தமிழ் தேர்வை, 109 மாணவர்கள், 106 மாணவியர் என, மொத்தம் 215 மாணவர்கள் எழுத வரவில்லை என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

