/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி... 94.71 சதவீதம்! கடந்த ஆண்டைவிட 2.19 சதவீதம் அதிகரிப்பு
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி... 94.71 சதவீதம்! கடந்த ஆண்டைவிட 2.19 சதவீதம் அதிகரிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி... 94.71 சதவீதம்! கடந்த ஆண்டைவிட 2.19 சதவீதம் அதிகரிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி... 94.71 சதவீதம்! கடந்த ஆண்டைவிட 2.19 சதவீதம் அதிகரிப்பு
ADDED : மே 07, 2024 03:53 AM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 94.71 சதவீதம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு, கடந்த ஆண்டை விட 2.19 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதனால், தேர்ச்சி விகிதத்தில், மாநில அளவில் செங்கல்பட்டு மாவட்டம் 18வது இடம் பிடித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம் என, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்தில், 236 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இதில், அரசு, நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளி என, 78 பள்ளிகள் உள்ளன. 20 அரசு உதவிபெறும் பள்ளிகள், 138 மெட்ரிக்குலேசன் மற்றும் சுயநிதி பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளில் இருந்து, 11,455 மாணவர்கள், 13,787 மாணவியர் என, 25,242 பேர் தேர்வு எழுதினர். இதில், 10,632 மாணவர்கள், 13,275 மாணவியர் என, 23,907 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 92.89 சதவீதமும், மாணவியர் 96.29 சதவீதம் என, மொத்த தேர்ச்சி விகிதம் 94.71 சதவீதம்.
அரசு, நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 4,018 பேர் தேர்வு எழுதியதில், 3,432 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 85.42.
இதில், தேர்வு எழுதிய 5,868 மாணவியரில், 5,459 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.03.
செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில், அஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி, தையூர் ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி, இரும்பேடு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன.
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், தேர்வு எழுதிய 3,821 மாணவ - மாணவியரில், 3,649 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.49.
தேர்வு எழுதிய 1,364 மாணவர்களில், 1,243 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 91.12. 2,457 மாணவியரில், 2,406 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 97.92.
குரோம்பேட்டை அய்யசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளி, செய்யூர் சிறுமலர் மேல்நிலைப் பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன.
மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில், தேர்வு எழுதிய மாணவர்கள் 11,545 பேரில், 11,367 தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 98.45. தேர்வு எழுதிய 6,073 மாணவர்களில், 5,957 தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி சதவீதம் 98.08. 5462 மாணவியரில், 5,410 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 99.08. மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில், 72 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 92.52. அப்போது, மாநில அளவில், செங்கல்பட்டு மாவட்டம் 22வது இடம்பெற்றது.
இந்த ஆண்டு, 2.19 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்து, 94.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனால், மாநில அளவில் 18வது இடம் பிடித்துள்ளது.
சென்னை மற்றும் வட மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதத்தை விட, செங்கல்பட்டு மாவட்டம் 18வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளதாக, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தெரிவித்தார்.
பின், மாநில அளவில் 18வது இடம் பெற்றது குறித்து, கலெக்டர் அருண்ராஜிடம், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், நேர்முக உதவியாளர்கள் உதயகுமார், சிவகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.
மாநில அளவில், செங்கல்பட்டு மாவட்டம் 18வது இடம் பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டு, அரசு பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகளையும், முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
- கலெக்டர் அருண்ராஜ்,
செங்கல்பட்டு மாவட்டம்.
செங்கல்பட்டு, நென்மேலியில் வசிக்கிறேன். தந்தை பாபு, ஊழல் எதிர்ப்பு தன்னார்வலராக உள்ளார். நென்மேலி, கோகுலம் பப்ளிக் பள்ளியில், 10ம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ., படித்தேன். பிளஸ் 1, பிளஸ் 2, திருக்கழுக்குன்றம் அரசுப் பள்ளியில் படித்தேன். காமர்ஸ், அக்கவுண்டன்சி ஆர்வத்தால், காமர்ஸ் படித்தேன். பி.காம்., முடித்த பின், யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத விரும்புகிறேன்.
- பி.ஆட்லின் வாலன்டினா,
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
திருக்கழுக்குன்றம்.
என் தந்தை ஆனந்தன், விவசாயக் கூலித் தொழிலாளி. ஆயப்பாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை படித்தேன். ஒன்பது முதல் பிளஸ் 2 வரை, புதுப்பட்டினம் அரசுப் பள்ளியில் படித்தேன். இன்ஜினியராகவோ அல்லது டாக்டராகவோ விருப்பம். 'நீட்' தேர்வும் எழுதியுள்ளேன்.
- ஏ.புவனேஸ்வரி,
அரசு மேல்நிலைப்பள்ளி,
புதுப்பட்டினம்.
தந்தை தனசேகரன், கொத்தனாராக பணியாற்றுகிறார். திருக்கழுக்குன்றம், பாரதி வித்யாலயா பள்ளியில், துவக்க கல்வி படித்து, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உயர்நிலை, மேல்நிலை படித்தேன். அறிவியல், கணிதம் ஆகியவற்றில் உள்ள விருப்பத்தால், 'பயோ - மேத்ஸ்' படித்தேன். டாக்டராக விருப்பம்.
- டி.யாமினி,
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
திருக்கழுக்குன்றம்.
செய்யூர் பகுதியில் இருந்து மதுராந்தகம் இந்து மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு, 20 கி.மீ., துாரம் பயணித்து வந்து படித்தேன். பள்ளி பாட வேளைகள் தவிர்த்து, கூடுதலாக காலை மற்றும் இரவு நேரங்களில் நன்றாக படித்தேன். ஆசிரியர்களின் வழிகாட்டுதலும், பெற்றோர் தந்த ஊக்கத்தாலும், நல்ல மதிப்பெண் பெற்றுள்ளேன்.
- த.சஞ்சனா,
இந்து மகளிர் மேல்நிலைப்பள்ளி-,
மதுராந்தகம்.