/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டில் பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
/
செங்கல்பட்டில் பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 24, 2024 10:55 PM
செங்கல்பட்டு:வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 1,000 நாட்கள் கடந்தும், இதுவரை இட ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே, பா.ம.க, மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பா.ம.க., மத்திய மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி இவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க, வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.
அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, 10 பேரை மட்டும் அனுமதிப்பதாக கூறினர்.
இதை ஏற்காமல், தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
பின், போலீசார் பேச்சு நடத்தி 30 பேரை மட்டும் உள்ளே அனுமதித்த நிலையில், இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கை மனுவை, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினியிடம் அவர்கள் அளித்தனர்.