/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளி மாணவிக்கு தொல்லை ஆட்டோ டிரைவருக்கு 'போக்சோ'
/
பள்ளி மாணவிக்கு தொல்லை ஆட்டோ டிரைவருக்கு 'போக்சோ'
ADDED : அக் 28, 2025 10:39 PM
திருப்போரூர்: வண்டலுார் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியான பள்ளி மாணவி ஒருவர், பள்ளி வேனில் செல்வது வழக்கம்.
இவர் பள்ளி வேனை தவற விடும் போது, வழக்கமான ஆட்டோ ஒன்றில் பள்ளிக்குச் செல்வது வழக்கம்.
அவ்வாறு கடந்த ஏப்ரல் மாதம், மாணவி ஆட்டோவில் சென்ற போது, ஆட்டோ டிரைவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதை அப்போது, மாணவி வீட்டில் கூறவில்லை. சில நாட்களுக்கு முன், அதே ஆட்டோவில் அனுப்ப முயற்சித்த போது, அதில் செல்ல மறுத்து, ஏற்கனவே நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார்.
இதையடுத்து மாணவியின் தாய், தாழம்பூர் போலீசில் புகார் அளித்தார்.
தாழம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த சிதம்பரம், 42, என்பவரை,'போக்சோ' வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

