/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமியிடம் அத்துமீறல் வாலிபருக்கு 'போக்சோ'
/
சிறுமியிடம் அத்துமீறல் வாலிபருக்கு 'போக்சோ'
ADDED : ஜூலை 30, 2025 11:18 PM
பல்லாவரம்:பல்லாவரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரது உறவினர்கள் தேடிய போது, பக்கத்து வீட்டு கழிப்பறையில், சிறுமியிடம் வாலிபர் ஒருவர் அத்துமீறி தொந்தரவு செய்துள்ளார்.
அதை கண்டு சிறுமியின் உறவினர் தட்டிக்கேட்டபோது, அந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து, பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுமியை கழிப்பறைக்குள் அழைத்து சென்ற வாலிபர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கர், 21, என்ற வாலிபரை, போக்சோ சட்டத்தின் கீழ், நேற்று போலீசார் கைது செய்தனர்.