/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் பயணிக்க போலீசார் தடை விதிப்பு
/
பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் பயணிக்க போலீசார் தடை விதிப்பு
பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் பயணிக்க போலீசார் தடை விதிப்பு
பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் பயணிக்க போலீசார் தடை விதிப்பு
ADDED : ஜூலை 07, 2025 11:34 PM

சிங்கபெருமாள்கோவில், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, சிங்கப்பெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில், பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் பயணிக்க, போலீசார் தடை விதித்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொண்டமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து மண் எடுக்க, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 25ம் தேதி முதல் ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டு வருகிறது.
தினமும் காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, 800க்கும் மேற்பட்ட 'டாரஸ்' லாரிகளில் மண் எடுக்கப்பட்டு சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
சிங்கபெருமாள் கோவில் பகுதியில், இந்த மண் லாரிகள் அசுர வேகத்தில் சென்று வந்தன. இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ள நிலையில், விபத்து ஏற்படும் சூழல் நிலவியது. இதனால், பள்ளி மாணவ -- மாணவியர் செல்லும் நேரத்தில் லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் சார்பில், ஏரி மண் எடுத்துச் செல்லும் டிப்பர் லாரிகளுக்கு, காலை 7:00 மணி முதல் 10:00 மணிவரையும், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரையும் தடை விதிக்கப்பட்டுள்ளது.