/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'சிசிடிவி கேமரா'க்கள் பழுதால் குற்றங்களை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல்

ADDED : டிச 12, 2025 06:17 AM

மதுராந்தகம்: கக்கிலப்பேட்டை-யில், திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் வைக்கப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளதால், குற்ற சம்பவங்களை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கக்கிலப்பேட்டை சந்திப்பு வழியாக திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையைக் கடக்கும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர்.
இதனால் மதுராந்தகம் காவல் துறை, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன், கக்கிலப்பேட்டை சாலையின் முக்கிய சந்திப்புகள் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்நிலையில், இந்த கேமராக்கள் சில மாதங்களாக பழுதடைந்து உள்ளன.
இதன் காரணமாக, குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் வாகன விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் செல்லும் நபர்களை கண்டறிவதில், போலீசாருக்கு பெரும் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, சேதமடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.