/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாம்பாக்கத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
/
மாம்பாக்கத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
மாம்பாக்கத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
மாம்பாக்கத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
ADDED : டிச 12, 2025 06:04 AM

சித்தாமூர்: மாம்பாக்கம் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அருகே மாம்பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட மாம்பாக்கம் காலனி பகுதியில், கழிவுநீர் கால்வாய் இல்லை.
குழாய்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அப்பகுதியில் சாலையோரம் தேங்குகிறது. எனவே, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது.
குறிப்பாக, சித்துார் செல்லும் சாலையோரத்தில் தேங்கும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசு உற்பத்தியாகி, இரவு நேரத்தில் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, வீடுகளுக்கு தனித்தனியே கழிவுநீர் தொட்டி அமைத்து, கழிவுநீரை தொட்டியில் வெளியேற்ற மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.