/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊராட்சி அலுவலக பூட்டு உடைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
/
ஊராட்சி அலுவலக பூட்டு உடைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
ஊராட்சி அலுவலக பூட்டு உடைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
ஊராட்சி அலுவலக பூட்டு உடைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
ADDED : ஆக 11, 2025 11:28 PM
திருப்போரூர், ஆக. 12--
தண்டலத்தில், ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில், ரேஷன் கடை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு, ஊராட்சி மன்ற அலுவலகத்தின் நுழைவாயில் கதவு பூட்டை உடைத்து, திருடுவதற்காக மர்ம நபர்கள் உள்ளே சென்றுள்ளனர். பின், அங்குள்ள ஊராட்சி செயலர் அறையின் பூட்டை உடைக்க முயற்சி செய்து, முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.
நேற்று காலை 10:00 மணியளவில், அலுவலகத்திற்கு ஊராட்சி செயலர் கோபாலகிருஷ்ணன் சென்ற போது, நுழைவாயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டது தெரிந்தது. இது குறித்து அவர், திருப்போரூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.