/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.35.93 லட்சம் மோசடி தம்பதிக்கு போலீஸ் 'காப்பு'
/
ரூ.35.93 லட்சம் மோசடி தம்பதிக்கு போலீஸ் 'காப்பு'
ADDED : பிப் 02, 2025 12:27 AM

சென்னை,மத்திய, மாநில அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, 35.93 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 37. இவரும் அவரது உறவினர்களான ஸ்ரீனிவாசன், தினேஷ் ஆகிய மூவரும், பொன்னியம்பேடு பகுதியைச் சேர்ந்த நந்தகோபாலன் என்பவருடன் குடும்ப நண்பர்களாக பழகி வந்தனர்.
இப்பழக்க வழக்கத்தின் போது நந்தகோபாலன் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகிய இருவரும், அரசு உயர் அதிகாரிகளிடம் நல்ல பழக்கம் உள்ளது. மத்திய - மாநில அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகக்கூறி, மூவரிடம் இருந்து, 35.93 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டனர். பின் வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கி தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் தம்பதி அலைக்கழித்து வந்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், நந்தகோபாலன், 40, திவ்யா, 35, ஆகியோரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.