/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறையில் கைதி மீது தாக்குதல் செங்கை போலீசார் வழக்குப்பதிவு
/
சிறையில் கைதி மீது தாக்குதல் செங்கை போலீசார் வழக்குப்பதிவு
சிறையில் கைதி மீது தாக்குதல் செங்கை போலீசார் வழக்குப்பதிவு
சிறையில் கைதி மீது தாக்குதல் செங்கை போலீசார் வழக்குப்பதிவு
ADDED : நவ 03, 2025 01:29 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில், மாவட்ட சிறை உள்ளது.
இந்த சிறையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, 22, தங்கதுரை,22, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது பயத்,22, உள்ளிட்டோர், பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக, சிறை வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்தின் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 28ம் தேதி இரவு, உணவு சாப்பிட மூவரையும் திறந்து விட்ட போது, மூவரும் சேர்ந்து சிறையில் உள்ள மற்றொரு கைதியான, கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் நாயக்,25, என்பவரை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
சிறைக்காவலர்கள் ராஜேஷ் நாயக்கை மீட்டு, முதலுதவி அளித்தனர்.
இது குறித்து, துணை சிறை அலுவலர் புகழரசி கொடுத்த புகாரின்படி, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் உள்ள, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த கைதிகள், இந்த சிறையில் இருந்து புழல் உள்ளிட்ட பல்வேறு சிறைகளுக்கு மாறுதல் பெற வேண்டும் என்ற நோக்கில், அடிக்கடி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது கு றிப்பிடத்தக்கது.

