/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை வெடிவிபத்து போலீசார் வழக்கு பதிவு
/
மாமல்லை வெடிவிபத்து போலீசார் வழக்கு பதிவு
ADDED : அக் 19, 2024 07:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்: மாமல்லபுரம் போலீஸ் குடியிருப்பில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மாமல்லபுரத்தில் போலீஸ் குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு பயன்பாடின்றி கைவிடப்பட்ட பழைய குடியிருப்பு கட்டடத்தில், கடந்த 17ம் தேதி, மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
நேற்று முன்தினம் தடய அறிவியல், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். வெடித்து சிதறியதாக கண்டறியப்பட்ட மர்ம பொருளை கைப்பற்றி, பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பினர்.
இதுகுறித்து, மாமல்லபுரம் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்குமார் அளித்த புகாரில்படி, மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.