/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண் துாக்கிட்டு தற்கொலை கணவருக்கு போலீஸ் 'காப்பு'
/
பெண் துாக்கிட்டு தற்கொலை கணவருக்கு போலீஸ் 'காப்பு'
பெண் துாக்கிட்டு தற்கொலை கணவருக்கு போலீஸ் 'காப்பு'
பெண் துாக்கிட்டு தற்கொலை கணவருக்கு போலீஸ் 'காப்பு'
ADDED : ஏப் 04, 2025 09:49 PM
செங்கல்பட்டு:கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்,32.
இவர், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பூர்ணிமா, 28, என்பவரை காதலித்து, ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து, செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பகுதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், தம்பதியிடையே அடிக்கடி ஏற்பட்ட சண்டை காரணமாக, ஒரு மாதமாக பிரிந்து, அதே பகுதியில் ஒரு வீட்டில், பூர்ணிமா தனியாக வசித்து வந்துள்ளார்.
கடந்த 31ம் தேதி, பூர்ணிமா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மணிகண்டன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது தான் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி, பூர்ணிமாவின் அக்கா வேணி, 32, என்பவர், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, மணிகண்டனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இச்சம்பவம் குறித்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

