/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கற்பக விநாயகா கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
/
கற்பக விநாயகா கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
கற்பக விநாயகா கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
கற்பக விநாயகா கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 12, 2024 11:21 PM

மதுராந்தகம்:படாளம் பகுதியில் உள்ள கற்பக விநாயகா மருத்துவக் கல்லுாரியில் தைத்திருநாள் பொங்கல் விழாவையொட்டி, நேற்று மாணவ - மாணவியர் பொங்கல் வைத்து வழிபட்டனர்.இந்நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லுாரி மேலாண்மை இயக்குனர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
மருத்துவக் கல்லுாரி முதல்வர் சுபாலா சுனில் விஷ்வாஷ்ராவ், கற்பக விநாயகா பல் மருத்துவக் கல்லுாரி டீன் மதன்மோகன், முதல்வர் பால குகன் முன்னிலை வகித்தனர்.
செவிலியர் கல்லுாரி முதல்வர் கோமளவள்ளி அனைவரையும் வரவேற்றார்.
இதில், மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து கல்லுாரி வளாகத்தில் கோ பூஜை செய்து, மண் பானைகள் வைத்து, பொங்கலிட்டு வழிபட்டனர்.
பின், இசை நாற்காலி, கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன.