/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜன.14ல் பொங்கல் பண்டிகை 2 மாத பயிரான பூசணி சாகுபடி
/
ஜன.14ல் பொங்கல் பண்டிகை 2 மாத பயிரான பூசணி சாகுபடி
ஜன.14ல் பொங்கல் பண்டிகை 2 மாத பயிரான பூசணி சாகுபடி
ஜன.14ல் பொங்கல் பண்டிகை 2 மாத பயிரான பூசணி சாகுபடி
ADDED : ஜன 05, 2025 01:14 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் 39 ஊராட்சிகளை கொண்டது. இதில் பாலூர், திம்மாவரம், ஆத்தூர், சாஸ்திரம்பாக்கம், வில்லியம்பாக்கம், திருவடிசூலம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழில்.
நெல் பயிர் மட்டுமின்றி வேர்கடலை, காய்கறி பயிர்களான கத்தரி, வெண்டை, புடலை, பூசணிக்காய் உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.
கிராமங்களில் மஞ்சள் பூசணிக்காய் பயிரிடப்படுகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ' கார்த்திகை மாத பட்டத்தில் கிணற்று பாசன விவசாயிகள் காய்கறிகளை பயிரிடுகின்றனர். குறுகிய கால செடியான மஞ்சள் பூசணிக்காயை சில விவசாயிகள் விரும்பி பயிரிடுகின்றனர்.
விதை நடவுசெய்ததில் இருந்து 65வது நாளில் காய்களை அறுவடை செய்யலாம். இந்த பூசணிக்காய் பொங்கல் தினத்தில் சூரியனை வணங்கி வைக்கும் படையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதை எதிர் நோக்கியே விவசாயிகள் சுற்றியுள்ள கிராமங்களில் பயிரிட்டு உள்ளனர்.
இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் செங்கல்பட்டு மொத்த விலை காய்கறி மார்கெட் கொண்டு சென்று விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

