/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் துவக்கம்
/
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் துவக்கம்
ADDED : ஜன 09, 2025 08:31 PM
திருப்போரூர்:'பொங்கலை முன்னிட்டு கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, பச்சரிசி என, பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்காக, அந்தந்த ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு 'டோக்கன்' வினியோகம் செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று, டோக்கன் எண் வரிசைப்படி, ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. வரும் 13ம் தேதி வரை, பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, செங்கல்பட்டு அடுத்த வல்லம் ஊராட்சி, நேருநகர் ரேஷன் கடையில், பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ் வழங்கி, நேற்று துவக்கி வைத்தார்.
இதேபோல், திருப்போரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில், பொங்கல் தொகுப்பு வினியோகம் துவக்க விழா, நேற்று நடந்தது.
விழாவில், திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் பங்கேற்று, பொங்கல் தொகுப்பை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 841 ரேஷன் கடைகளில், 4 லட்சத்து 44 ஆயிரத்து 559 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை, 4 லட்சத்து 36 ஆயிரத்து 61 அட்டைதாரர்கள் பெறுகின்றனர்.

