/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்
/
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்
ADDED : ஜன 05, 2025 01:20 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் துவங்கி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆறு தாலுக்காவில், தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 4.36 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டோக்கன் வழங்கும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. வரும் 13ம் தேதிவரை, நடைபெறும். இப்பணியில், 500 க்கும் மேற்பட்ட ரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில், குடும்ப அட்டையில், இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் ஏவரேனும் ஒருவர் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில், ஏதேனும் புகார் இருப்பின், கலெக்டர் கட்டுப்பாட்டு அறை எண்; 044-27427412- 27427414 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என, கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

