/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு சிற்பக்கல்லுாரி மாணவர்களிடம் பூம்புகார் விருது போட்டி
/
அரசு சிற்பக்கல்லுாரி மாணவர்களிடம் பூம்புகார் விருது போட்டி
அரசு சிற்பக்கல்லுாரி மாணவர்களிடம் பூம்புகார் விருது போட்டி
அரசு சிற்பக்கல்லுாரி மாணவர்களிடம் பூம்புகார் விருது போட்டி
ADDED : பிப் 13, 2025 01:02 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம், அரசு கட்டட, சிற்பகலைக் கல்லுாரி மாணவர்கள், பூம்புகார் கைத்திறன் போட்டியில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின்கீழ் இயங்கும் பூம்புகார் நிறுவனம், மரபு கலைகள் கல்லுாரி மாணவ - மாணவியரிடம், அடுத்த தலைமுறை கைவினைஞக் கலைஞர்கள் கைத்திறன் போட்டியை ஆண்டுதோறும் நடத்துகிறது.
அதில் தேர்வு செய்யப்படுவோருக்கு, தலா இரண்டாயிரம் ரூபாய், வெள்ளி பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்குகிறது.
மாமல்லபுரம், அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரி மாணவர்களிடம், 2024 - 25ம் ஆண்டிற்கான போட்டி, நேற்று நடத்தப்பட்டது.
கல், மரம், சுதை, உலோகம் ஆகிய சிற்பக்கலைகள் மற்றும் வண்ண ஓவியம் ஆகிய பிரிவுகளில், 41 பேர் பங்கேற்றனர்.
கல்லுாரி மாமல்லபுரம் பூம்புகார் நிறுவன மேலாளர் வேலு போட்டியை பார்வையிட்டார். சிற்ப கலைத்திறன் அடிப்படையில், 25 பேரை தேர்வு செய்து, பரிசளிக்க உள்ளதாக தெரிவித்தார்.