/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூம்புகார் கைவினை கண்காட்சி கல்பாக்கத்தில் துவக்கம்
/
பூம்புகார் கைவினை கண்காட்சி கல்பாக்கத்தில் துவக்கம்
பூம்புகார் கைவினை கண்காட்சி கல்பாக்கத்தில் துவக்கம்
பூம்புகார் கைவினை கண்காட்சி கல்பாக்கத்தில் துவக்கம்
ADDED : ஜூலை 03, 2025 09:34 PM
கல்பாக்கம்:பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை, கல்பாக்கத்தில் துவக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு கைத்திற தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையம், மாமல்லபுரத்தில் இயங்குகிறது.
அதன் விற்பனை மேம்பாடு, சந்தை வாய்ப்பு கருதி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை, கல்பாக்கம் பெண்கள் விடுதியில் தற்போது துவக்கப்பட்டுள்ளது.
கல்பாக்கம், பொதுப்பணி சேவைகள் பிரிவு எஸ்டேட் அலுவலர் சாமிகண்ணன் துவக்கினார். மாமல்லபுரம் பூம்புகார் நிலைய நிர்வாகி வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமும் காலை 10:30 மணி முதல், இரவு 9:00 வரை என, வரும் 13ம் தேதி வரை இக்கண்காட்சி நடக்கிறது.
இதில், பல்வேறு வகை கைவினைப் பொருட்கள், கல், மரம், பஞ்சலோக சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், வீட்டு உபயோக கைவினைப் பொருட்கள், ஆபரணங்கள், கைத்தறி ஆடைகள், தோல் பொருட்கள்.
பூஜை பொருட்கள், கல், களிமண், காகிதக்கூழ் பொம்மைகள், கொலு பொம்மைகள், மதுரை சுங்கடி புடவைகள், ராஜஸ்தான் கைத்தறி தயாரிப்புகள் உள்ளிட்டவை என, 50 ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வரை காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
பத்து சதவீத தள்ளுபடி அளிப்பதாகவும், கிரெடிட் கார்டு அனுமதிப்பதாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.