/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை சிற்பிக்கு பூம்புகார் மாநில விருது
/
மாமல்லை சிற்பிக்கு பூம்புகார் மாநில விருது
ADDED : பிப் 19, 2025 11:54 PM

மாமல்லபுரம் மாமல்லபுரம் சிற்பக்கலைஞர் ரமேஷ், பூம்புகார் மாநில விருது பெற்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 50. மாமல்லபுரம் அரசு கட்டட, சிற்பக்கலைக்கல்லுாரியில், மரபு மரச்சிற்பக்கலையில் பட்டம் பெற்றவர்.
மாமல்லபுரம் அடுத்த, பெருமாளேரி பகுதியில், மானசா என்ற சிற்பக்கூடம் நடத்துகிறார். அயோத்தி ராமர் கோவில் கர்ப்பகிரஹக வாயில், சன்னிதிகளில் பொருத்தப்பட்ட கலையம்ச மரக்கதவுகள், ராமர் சிலையை பிரதிஷ்டைக்கு கொண்டுசென்ற பல்லக்கு உள்ளிட்டவற்றை, இவர் வடிவமைத்து செதுக்கியுள்ளார்.
கைத்திறத் தொழில்களில், கைவினைக் கலைஞர்களின் பங்களிப்பு, மேம்பாடு, படைப்பு ஆகியவை கருத்திற்கொண்டு, ஆண்டுதோறும் சிறந்த கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருது வழங்கி கவுரவிக்கிறது. நேற்று முன்தினம் சென்னையில் நடந்த விழாவில், நான்கு கிராம் தங்க பதக்கம், 50,000 ரூபாய் பரிசுத்தொகை, செப்பு பட்டய சான்று ஆகியவற்றை, முதல்வர் ஸ்டாலின் அவரிடம் அளித்தார்.
2023- 24ன் மரச்சிற்பக்கலை பிரிவில், அவருக்கு, இவ்விருது வழங்கி கவுரவித்துள்ளது. விருது தேர்வு போட்டிக்காக, வாயிற்பகுதி துாணாக, யானை, குதிரை, வீரர்கள், பூதகணங்கள் உள்ளிட்டவற்றுடன் செட்டிநாடு பகுதி கலையம்ச சிற்பம் வடித்து, விருது பெற்றுள்ளார்.

