/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகில் மோசமான சாலைகளால் அவஸ்தை
/
கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகில் மோசமான சாலைகளால் அவஸ்தை
கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகில் மோசமான சாலைகளால் அவஸ்தை
கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகில் மோசமான சாலைகளால் அவஸ்தை
ADDED : பிப் 21, 2024 11:47 PM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில், அரை கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது.
இந்த சாலையை, சீரமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும், பணிகளை துவங்கவில்லை.
அதனால், போக்குவரத்திற்கு லாயக்கற்ற முறையில், வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பாதசாரிகளும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில், அரை கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்த சாலையை, பொதுமக்கள் அதிகமாக பயன் படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, இந்த சாலையை கடந்து தான், நந்திவரம் அரசு மருத்துவமனை, உதவி கமிஷனர் அலுவலகம், கூடுவாஞ்சேரி காவல் நிலையம், நாராயணபுரம், ராணி அண்ணா நகர், கிருஷ்ணாபுரம், நந்திவரம் போன்ற பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.
இந்த சாலையை சீரமைப்பதில், நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுகிறது. மேலும், பேருந்து நிலையத்தின் பின்புறம், வண்டலுார் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.
மிகவும் முக்கிய சாலையாக விளங்கும் இந்த சாலையை, விரைந்து சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.