/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பஸ் நிலைய நுழைவாயிலில் பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
பஸ் நிலைய நுழைவாயிலில் பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
பஸ் நிலைய நுழைவாயிலில் பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
பஸ் நிலைய நுழைவாயிலில் பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : அக் 25, 2025 02:33 AM

திருப்போரூர்: திருப்போரூர் பேருந்து நிலைய நுழைவாயிலில் உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டு மென, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்து உ ள்ளனர்.
திருப்போரூரில், ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
இங்கிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, தி.நகர், பிராட்வே, கோயம்பேடு உட்பட பல்வேறு இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பேருந்து நிலைய நுழைவாயிலில், ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி நெடுஞ்சாலைத் துறை சார்பில், மூடிய கான்கிரீட் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
அங்கு, கான்கிரீட் கலவை கொட்டி சரியான முறையில் சமன்படுத்தாததால் மேடு பள்ளமாக உள்ளது.
இதனால், வாகனங்கள் செல்லும் போது, இப்பள்ளத்தில் நிலைதடுமாறி செல்கின்றன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.