/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தத்தலுார் சாலை ஓரத்தில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
/
தத்தலுார் சாலை ஓரத்தில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
தத்தலுார் சாலை ஓரத்தில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
தத்தலுார் சாலை ஓரத்தில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : நவ 23, 2025 02:02 AM

திருக்கழுக்குன்றம்: தத்தலுாரில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் இருபுறமும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம் அடுத்த, தத்தலுார் பகுதியில் வசிப்பவர்கள், அத்தியாவசியத் தேவைகள், மருத்துவம் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கு, திருக்கழுக்குன்றம் செல்கின்றனர். அங்கிருந்து, திருக்கழுக்குன்றம் - கருங்குழி சாலை பகுதி வரையுள்ள சாலையை கடந்து செல்கின்றனர்.
3 கி.மீ., தொலைவுள்ள இச்சாலையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து, பள்ளங்கள் ஏற்பட்டு, இருசக்கர வாகனங்கள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் தடுமாறி அவதிக்குள்ளாகினர்.
புதிய சாலை அமைக்க, அப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தியதைத் தொடர்ந்து, வட்டார வளர்ச்சி நிர்வாகம், தற்போது தார்ச்சாலை அமைத்துள்ளது.
புதிய சாலை உயரமாக அமைந்து, இருபுற விளிம்பு பகுதியிலும், மண் அணைக்கப்படாமல் ஆபத்தான பள்ளம் காணப்படுகிறது.
பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்லும்போது, இருசக்கர வாகனம் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் ஒதுங்க முடியாமலும், ஒதுங்க முயன்றால் சரிவில் விழும் அபாயம் உள்ளது. எனவே, மண் பள்ளத்தில் மண் நிரப்பி சாலை உயரத்திற்கு மேடாக மாற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

