/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கச்சூர் சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
/
திருக்கச்சூர் சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
திருக்கச்சூர் சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
திருக்கச்சூர் சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
ADDED : ஆக 28, 2025 02:00 AM

மறைமலை நகர்:புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் விரிசல் மற்றும் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மறைமலைநகர் --- திருக்கச்சூர் சாலை 5 கி. மீ., உடையது. இச்சாலையை திருக்கச்சூர், பேரமனூர், பனங்கொட்டூர், உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை சிங்கபெருமாள் கோவில்- - ஸ்ரீபெரும்புதூர் சாலையின் இணைப்பு சாலை.
இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, மறைமலைநகர் - - பேரமனூர் வரை 3.5 கி.மீ இரண்டு கட்டங்களாக 2023ம் ஆண்டு சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. விடுபட்ட திருக்கச்சூர் -- பேரமனூர் வரை 1.4கி.மீ., கொண்ட திருக்கச்சூர் - - பேரமனூர் சாலை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2024- - 25ன் கீழ் 2 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பில் கடந்த பிப்., மாதம் துவங்கப்பட்டு 1.4 கி. மீ., இடையே 5 இடங்களில் மழைநீர் செல்லும் பெட்டி வடிவ 5 சிறு பாலங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்றது.
தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் திருக்கச்சூர் பகுதியில் சாலையின் நடுவே விரிசல் மற்றும் பள்ளம் ஏற்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையை அதிகளவில் இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். கனரக வாகனங்கள் குறைந்தளவில் செல்லும் இந்த சாலை அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே சேதமடைந்துள்ளது. அதன் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த சாலையில் பேரமனுார் பகுதியிலும் சேதமடைந்து 'பேட்ச் ஒர்க்' பணிகள் நடைபெற்று உள்ளன.
எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.