/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இ.சி.ஆரில் பள்ளங்கள் சீரமைப்பு
/
இ.சி.ஆரில் பள்ளங்கள் சீரமைப்பு
ADDED : நவ 15, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர்: கிழக்கு கடற்கரை சாலை கடப்பாக்கம் பகுதியில், சாலையில் ஏற்பட்ட பள்ளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையை, நான்கு வழிச் சாலையாக மாற்ற 'டெண்டர்' விடப்பட்டு, விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.
இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக பராமரிப்பின்றி, இச்சாலையில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக கடப்பாக்கம், எல்லையம்மன் கோவில், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
இதனால், இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.

