/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேளாண் துறை வாடகை இயந்திரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
/
வேளாண் துறை வாடகை இயந்திரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
வேளாண் துறை வாடகை இயந்திரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
வேளாண் துறை வாடகை இயந்திரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : நவ 15, 2025 11:20 PM
செய்யூர்: வேளாண் பொறியியல் துறை மூலமாக வாடகைக்கு விடப்படும் இயந்திரங்களை பதிவு செய்து பயன்படுத்துவது குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, ச மூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியத்தில் 84 ஊராட்சிகள் உள்ளன.
30,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நெல், மணிலா, கரும்பு, எள், உளுந்து, தர்ப்பூசணி ஆகியவை பருவத்திற்கு ஏற்றது போல பயிரிடப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் அதிகப்படியாக சம்பா பருவத்தில் பொன்னி, பி.பி.டி., குண்டு, எல்.என்.ஆர்., உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்களில், 15,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
மதுராந்தகத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகம் மூலமாக வேளாண் இயந்திரங்கள், சோலார் மின் மோட்டார் பம்ப் செட் மற்றும் வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் உள்ளிட்டவை, வாடகைக்கு விடப்படும். செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள், இவற்றை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது, சம்பா பருவ நெல் நடவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் டிராக்டரில்உழவு செய்தால் ஒரு மணி நேரத்திற்கு 1,100 முதல் 1,300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், வேளாண் பொறியியல் துறை மூலமாக வாடகைக்கு விடப்படும் டிராக்டரில் ஒரு மணி நேரத்திற்கு, 500 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
விபரம் தெரிந்த, 'ஸ்மார்ட் போன்' வைத்துள்ள ஒரு சில விவசாயிகள், 'உழவன் செயலி' மூலமாக முன்பதிவு செய்து, வேளாண் பொறியியல் துறை டிராக்டர்கள் மூலமா க, குறைந்த செலவில் உழவு செய்து பயனடைந்து வருகின்றனர்.
போதிய விழிப்புணர்வு இல்லாததால், கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் அதிக விலை கொடுத்து, தனியார் டிராக்டரில் தங்களது நிலங்களை உழவு செய்து வருகின்றனர்.
எனவே துறை சார்ந்த அதிகாரிகள், வேளாண் பொறியியல் துறை சார்பாக வாடகைக்கு விடப்படும் இயந்திரங்களை பதிவு செய்து பயன்படுத்துவது குறித்து, கிராமப்புற விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

