/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேலமையூரில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

ADDED : நவ 15, 2025 11:21 PM
செங்கல்பட்டு: மேலமையூர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில், மேலமையூர் ஊராட்சி பகுதியில் சாலையின் இருபுறமும், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளன.
இங்கு செங்கல்பட்டு, மேலமையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், தினமும் மாலை நேரங்களில் பொருட்கள் வாங்க வருகின்றனர்.
இவர்கள் தங்களது வாகனங்களை, சாலையை ஆக்கிரமித்து தாறுமாறாக நிறுத்துகின்றனர்.
இதுமட்டுமின்றி, சாலையோர உணவுக் கடைகள், காய்கறி கடைகள் இங்கு உள்ளன. இப்பகுதியில், தினமும் மாலை 5:00 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரை, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இவ் வழியாக திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, தினமும் மாலை நேரங்களில், மே லமையூர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.