ADDED : செப் 22, 2024 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதிகளிலும், வண்டலுார், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது.
மேலும் காற்று பலமாக அடித்ததால், கூடுவாஞ்சேரி, தைலாவரம், வல்லாஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டது. இதனால், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் துாக்கமின்றி தவித்தனர்.
நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை 6:00 மணி வரை மழை விட்டு விட்டு பெய்தது.