/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி பகுதியில் இன்று மின் தடை
/
கூடுவாஞ்சேரி பகுதியில் இன்று மின் தடை
ADDED : ஜூலை 02, 2025 10:43 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி, நெம்மேலி மற்றும் சுற்றுப் பகுதியில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுவாஞ்சேரி, 33/11 கே.வி., துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பேரமனுார், மேல்கல்வாய் ஆகிய இடங்களில் உள்ள 11 கே.வி., மின்னுாட்டிகளில், இன்று காலை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
தவிர, கண்ணகப்பட்டு 110/11 கே.வி., துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட, நெம்மேலி 11 கே.வி., மின்னுாட்டியிலும் இன்று காலை அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், கீழ்வரும் பகுதிகளில் இன்று காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரையில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.
மகாலட்சுமி நகர் விரிவு, கற்பாகம்பாள் நகர், இன்டிமேட் பேஷன், பெரியார் நகர், நாராயணபுரம், ஜி.எஸ்.டி., சாலை, பொது மருத்துவமனை, விஸ்வநாதபுரம், வீரபாகு நகர், ராமலிங்கம் தெரு.
ஜாகீர் ஹூசேன் தெரு, கிருஷ்ணாபுரம், நங்கூரம் நகர், வண்டலுார் வட்டாட்சியர் அலுவலகம், கண்ணகி தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
நெம்மேலி, குளரிக்காடு, திருவிடந்தை, பேரூர், புதிய கல்பாக்கம், வட நெம்மேலி, தெற்குப்பட்டு மற்றும் குளேரிக்காடு முதல் திருவிடந்தை வரையிலான இ.சி.ஆர்., சாலை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகள்.