/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தைலாவரம் பகுதியில் இன்று மின் தடை
/
தைலாவரம் பகுதியில் இன்று மின் தடை
ADDED : ஜூலை 03, 2025 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் சுற்றுப் பகுதியில், இன்று மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மறைமலை நகர் மின்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் 33/11 கே.வி., துணை மின் நிலையத்தில் உள்ள அந்தோணி பிள்ளை நகர் 11 கே.வி., மின்னுாட்டியில், இன்று காலை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் வீரபத்ரா நகர், 'ஏடூபி' உணவகம், ஜி.எஸ்.டி., சாலை ஒரு பகுதி, கருப்பட்டி காபி கடை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.