/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வரதராஜபுரம், முடிச்சூரில் ஆறு மணி நேரம் மின்தடை
/
வரதராஜபுரம், முடிச்சூரில் ஆறு மணி நேரம் மின்தடை
ADDED : ஜூன் 07, 2025 10:36 PM
முடிச்சூர்:தாம்பரம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட, முடிச்சூர், பெருங்களத்துார், வரதராஜபுரம் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு 10:15 மணிக்கு, திடீரென மின் தடை ஏற்பட்டது. பல மணி நேரம் ஆகியும் மின் இணைப்பு வராததால், அப்பகுதிவாசிகள் குழந்தைகளுடன் சாலைகளில் முகாமிட்டனர்.
மின்வாரிய அலுவலகத்தை தொடர்புகொள்ள முடியாததால், நேரடியாக சென்று முறையிட்டும், முறையான பதில் கிடைக்கவில்லை. அதனால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இறுதியில், முடிச்சூர் துணை மின் நிலையத்தில் வடம் பழுதாகி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால், இரவு முழுதும் துாக்கமின்றி அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டனர்.
பின், ஆறு மணி நேரம் கழித்து, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளுக்கு சப்ளை வந்தது. பெருங்களத்துார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், இரண்டு மணி நேரத்திற்கு மேல் சப்ளை இல்லாததால், அப்பகுதிவாசிகளும் சிரமத்திற்கு ஆளாகினர். நேற்று முன்தினம் இரவு மட்டும், பெருங்களத்துாரில் இருந்து, 37 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.
மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, நேற்று முன்தினம் இரவு, புதுதாங்கலில் இருந்து முடிச்சூர் துணை மின் நிலையத்திற்கு செல்லும் பிரதான மின் வடம், திடீரென பழுதாகிவிட்டது. இதனால், முடிச்சூர், பெருங்களத்துார் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. பழுதை சரிசெய்து, படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டது,” என்றனர்.