/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மானிய விலையில் விவசாயிகளுக்கு 'பவர்டில்லர்'
/
மானிய விலையில் விவசாயிகளுக்கு 'பவர்டில்லர்'
ADDED : டிச 05, 2024 11:15 PM
செங்கல்பட்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர்டில்லர், விசைக்களை எடுக்கும் கருவி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர், 2024 -25ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர்டில்லர், விசைக்களை எடுக்கும் கருவி வழங்கப்படும் என, அறிவித்தார்.
தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில், பவர்டில்லர் வாங்க அதிகபட்சமாக 1.20 லட்சம் ரூபாய். களையெடுப்பான்களுக்கு அதிகபட்சமாக 63,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
கருவியின் மொத்த விலையில், 50 சதவீதம், இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட மானியம் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, உதவி செயற்பொறியாளர் 9003090440 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.