/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு
/
சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு
ADDED : ஏப் 28, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:அரும்பாக்கம் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில், கடந்த 16ம் தேதி சிறுவன் ஒருவன் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கியது.
அந்த வழியாக சென்ற இளைஞர் கண்ணன் என்பவர், துரிதமாக செயல்பட்டு, அந்த சிறுவனை காப்பாற்றினார்.
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சிறுவனை காப்பாற்றிய கண்ணனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், சிறுவன் உயிரை காப்பாற்றிய கண்ணனுக்கு, பாராட்டு விழா நடந்தது.
இதில், சங்க தலைவர் வி.சந்தானம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி பங்கேற்று, இளைஞர் கண்ணனை பாராட்டினார்.