/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் கோவிலில் பிரமோத்சவ விழா நிறைவு
/
திருப்போரூர் கோவிலில் பிரமோத்சவ விழா நிறைவு
ADDED : மார் 16, 2025 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ பெருவிழா, திருக்கல்யாண வைபவத்துடன் நிறைவானது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் தேதி தேர்த்திருவிழா நடந்தது. 12ம் தேதி மாசி மக தெப்பத் திருவிழா நடந்தது.
தொடர்ந்து, நேற்று காலை 8:00 மணிக்கு கந்தபெருமான் வள்ளியை மணம் முடிக்கும் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடந்தது.
திருக்கல்யாண வைபவத்திற்கு பின் வளையல், பூ பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கந்தபெருமான் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்தார். இத்துடன் பிரமோத்சவ விழா நிறைவு பெற்றது.