/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பருவமழை முன்னெச்சரிக்கை மரக்கிளைகள் அகற்றம்
/
பருவமழை முன்னெச்சரிக்கை மரக்கிளைகள் அகற்றம்
ADDED : அக் 05, 2024 12:03 AM

கல்பாக்கம்:அணுசக்தி துறையின்கீழ் கல்பாக்கம் நகரிய பகுதி உள்ளது. அத்துறை நிறுவனங்களின் அறிவியலாளர்கள், ஊழியர்கள் வசிக்கின்றனர்.
நகரிய பகுதி சுற்றுச்சூழல், பசுமை தன்மை கருதி, நகரியம் முழுதும் உள்ள சாலைகளின் இருபுறமும், காலி இடங்களில் நீண்டகாலமாக மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. அவை அடர்ந்து வளர்ந்து பசுமை வனமாக உள்ளது.
வடகிழக்கு பருவ மழைக்காலத்தில், புயல், சூறாவளி காற்று என வீசினால், மரங்கள் வேறுடன் சரிந்து விழும். பிரதான சாலைகளில், சாலை வரை நீண்டுள்ள மரக்கிளைகள், தெருவிளக்கு வெளிச்சத்தையும் மறைத்து இருளாக உள்ளது.
வடகிழக்கு பருவ மழைக்காலம் துவங்கவுள்ளது. எனவே, மரங்கள் பெயர்ந்து விழுவதை தவிர்க்க, நகரிய நிர்வாகம் சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரிய கிளைகளை வெட்டி அகற்றும் பணி நடந்தது.