/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலர் பஞ்சாயத்து பயிற்சி முகாம்
/
பாலர் பஞ்சாயத்து பயிற்சி முகாம்
ADDED : செப் 28, 2024 07:17 PM
திருப்போரூர்:தமிழக அரசு குழந்தைகள் நலன் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஊராட்சியிலும், பாலர் பஞ்சாயத்து அமைத்திட அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில், திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில், பாலர் பஞ்சாயத்து அமைப்பதற்கான பயிற்சி முகாம், தண்டலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், நேற்று நடந்தது.
இதில், ஊராட்சி தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மதிச்செல்வன், குழந்தைகள் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பின் கன்வீனர் தேவன்பு பங்கேற்று, குழந்தைகள் உரிமைகள், அவர்களின் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பேசினார்.
மாவட்ட முன்னாள் குழந்தைகள் நலக்குழும தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சித்ரா, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு தலைவர் சித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.