/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிரசவத்தில் பெண் குழந்தை இறப்பு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை
/
பிரசவத்தில் பெண் குழந்தை இறப்பு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை
பிரசவத்தில் பெண் குழந்தை இறப்பு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை
பிரசவத்தில் பெண் குழந்தை இறப்பு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை
ADDED : டிச 11, 2024 12:38 AM

சதுரங்கப்பட்டினம்:சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியர்கள் பிரசவம் பார்த்து பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் நேற்று, சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கல்பாக்கம் அடுத்த வாயலுாரைச் சேர்ந்தவர் துரைராஜ், 37; ஓட்டுனர். இவரது மனைவி சுஜாதா, 33. தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
தற்போது, 10 ஆண்டுகள் கழித்து கருவுற்ற சுஜாதா, சதுரங்கப்பட்டினத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு ஆலோசனை, சிகிச்சை பெற்று வந்தார். தாயும் சேயும் நல்ல நிலையில் உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8ம் தேதி இரவு, 10:15 மணியளவில் பிரசவத்திற்காக, சுஜாதாவை அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் இல்லாத நிலையில், இரண்டு செவிலியர், உதவியாளர் ஆகியோர் பிரசவம் பார்த்துள்ளனர்.
அப்போது, சுஜாதாவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று காலை, 108 ஆம்புலன்சில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு பிரசவம் இயல்பாக நடந்து, பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. அன்றே குழந்தையை அடக்கம் செய்த குடும்பத்தினர், நேற்று காலை, சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார மையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் கவிதா, சதுரங்கப்பட்டினம் போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தினர். பிரசவத்தில் எந்த தவறும் நடக்கவில்லை எனக் கூறி, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.