/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதல்வர் கோப்பை போட்டி எம்.ஓ.பி., கல்லுாரி அசத்தல்
/
முதல்வர் கோப்பை போட்டி எம்.ஓ.பி., கல்லுாரி அசத்தல்
முதல்வர் கோப்பை போட்டி எம்.ஓ.பி., கல்லுாரி அசத்தல்
முதல்வர் கோப்பை போட்டி எம்.ஓ.பி., கல்லுாரி அசத்தல்
ADDED : செப் 25, 2024 06:16 AM
சென்னை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பள்ளி, கல்லுாரி, அரசு ஊழியர்கள் உட்பட ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
சென்னை கல்லுாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள், கடந்த 10 முதல் 18ம் தேதி வரை, பல்வேறு மைதானங்களில் நடந்தன. அதில், பெண்களுக்கான கல்லுாரி பிரிவில், எம்.ஓ.பி., வைஷ்ணவ் கல்லுாரி மாணவியர் அணி, கூடைப்பந்து, கிரிக்கெட், ஹேண்ட்பால், ஹாக்கி, டேபிள் டென்னிஸ் போட்டிகளில் முதலிடங்களை பிடித்தது.
அதேபோல் சிலம்பம், வாள்வீச்சு மற்றும் கால்பந்தில் இரண்டாமிடமும், வாலிபாலில் மூன்றாமிடமும் பிடித்தன. பேட்மின்டன் விளையாட்டில், தனிநபர் மற்றும் இரட்டை யரில் முதல் மூன்று இடங்களையும் எம்.ஓ.பி., மாணவியரே கைப்பற்றி அசத்தினர்.
தவிர, தடகளத்தில் எட்டு தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது. நீச்சலிலும் ஐந்து தங்கம், மூன்று வெள்ளி பதக்கங்களை கைப்பற்றினர்.