/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் வேலைவாய்ப்பு முகாம் 46 பேருக்கு பணி ஆணை
/
தனியார் வேலைவாய்ப்பு முகாம் 46 பேருக்கு பணி ஆணை
ADDED : ஜன 26, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், தனியார் வேலைவாய்ப்பு முகாமில், 46 பேருக்கு, பணி நியமனை ஆணை வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், கலெக்டர் வளாகத்தில், நடத்தியது.
முகாமில், 44 வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, 145 பேரிடம், நேர்முக தேர்வு நடத்தினர். இதில், 46 பேருக்கு பணிநியமன ஆணைகளை, கலெக்டர் அருண்ராஜ், வழங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தணிகைவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.