/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் தொழிற்சாலை பஸ் மைய தடுப்பில் மோதி சேதம்
/
தனியார் தொழிற்சாலை பஸ் மைய தடுப்பில் மோதி சேதம்
ADDED : ஆக 25, 2025 11:13 PM

மறைமலைநகர், மறைமலை நகரில், தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்தில் சிக்கி சேதமடைந்தது.
செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி, ஜெயலின் டிராவல்ஸ் என்ற தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து, நேற்று அதிகாலை 4:30 மணியளவில், ஜி.எஸ்.டி., சாலையில் சென்று கொண்டிருந்தது.
இதில், 14 பேர் பயணித்தனர். மறைமலை நகர் பேருந்து நிறுத்தம் அருகில் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை நடுவே மைய தடுப்பில் உள்ள இரும்பு தடுப்புகளில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தின் முன் பக்கம் முழுதும் சேதமடைந்தது.
நல்வாய்ப்பாக, பேருந்தில் இருந்த அனைவரும் காயமின்றி தப்பினர். தகவலறிந்து வந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், 'கிரேன்' இயந்திரத்தின் உதவியுடன் பேருந்தை மீட்டனர்.
விபத்து குறித்து, பொத்தேரில் செயல்பட்டு வரும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.