/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேம்பாலம் கீழ் வாகனம் நிறுத்தி தனியார் உரிமையாளர்கள் அடாவடி
/
மேம்பாலம் கீழ் வாகனம் நிறுத்தி தனியார் உரிமையாளர்கள் அடாவடி
மேம்பாலம் கீழ் வாகனம் நிறுத்தி தனியார் உரிமையாளர்கள் அடாவடி
மேம்பாலம் கீழ் வாகனம் நிறுத்தி தனியார் உரிமையாளர்கள் அடாவடி
ADDED : பிப் 09, 2024 10:21 PM

பெருங்களத்துார்:சென்னை- -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகில், மாநில நெடுஞ்சாலை- மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து, 234 கோடி ரூபாய் செலவில், மேம்பாலம் கட்டும் பணிகளை மேற்கொள்கின்றன.
இத்திட்டத்தில், ரயில்வே தண்டவாளத்தை கடந்து, பீர்க்கன்காரணை சீனிவாசா நகரில் இறங்கும் பாதை, 2023ல் திறக்கப்பட்டது. ஏராளமான வாகனங்கள், இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இம்மேம்பால பாதை, அணுகு சாலை, கீழ்பகுதி ஆகிய இடங்கள், தனியார் வாகன நிறுத்தமாக மாறி வருகின்றன. இதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். இல்லையெனில், முழுதாக ஆக்கிரமிக்கப்படலாம்.
தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுத்து, கீழ்பகுதியில் பூங்கா அமைத்து பராமரிக்க, நெடுஞ்சாலைத் துறை முன்வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.