/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு
/
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு
ADDED : நவ 29, 2024 12:07 AM
செங்கல்பட்டு, சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு - பரனுார் இடையில், சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து, தனியார் நிறுவன பேருந்துகள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
இதனால், சர்வீஸ் சாலையில் செல்ல வேண்டிய இருசக்கர வாகனம் மற்றும் பாதசாரிகள், சாலையின் மையப்பகுதியில் விபத்து அபாயத்துடன் சென்று வருகின்றனர். இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.
அவற்றின் உரிமையாளர்கள் வாகனங்களை எடுக்கவில்லை எனில், போலீசார் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
ஆனால், வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில், போலீசார் ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
எனவே, பெரிய சாலை விபத்துகள் நடப்பதற்குள், சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள தனியார் பேருந்துகளை அப்புறப்படுத்த, போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.