/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூட்டுறவு பற்றி தனித்துவமான பாடல் அனுப்புவோருக்கு பரிசு
/
கூட்டுறவு பற்றி தனித்துவமான பாடல் அனுப்புவோருக்கு பரிசு
கூட்டுறவு பற்றி தனித்துவமான பாடல் அனுப்புவோருக்கு பரிசு
கூட்டுறவு பற்றி தனித்துவமான பாடல் அனுப்புவோருக்கு பரிசு
ADDED : ஏப் 23, 2025 01:40 AM
செங்கல்பட்டு:கூட்டுறவு பற்றிய தனித்துவமான, ஐந்து நிமிடங்கள் ஒலிபரப்பக்கூடிய வகையில் பாடல் அனுப்புவோருக்கு, பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கை:
இந்த ஆண்டு, சர்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகிறன்றன.
பாடலானது இசையமைக்கப்பட்டு, ஐந்து நிமிடங்கள் ஒலிபரப்பக்கூடிய வகையில், பாடல் வரிகள் இருக்க வேண்டும்.
கூட்டுறவு பற்றிய, தமிழில் தனித்துவமான பாடலாக இருக்க வேண்டும்.
கூட்டுறவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, கூட்டுறவு பற்றிய எழுச்சி மற்றும் உத்வேகத்தை உண்டாக்கக் கூடியதாக பாடல் இருக்க வேண்டும்.
அனுப்பப்படும் பாடல்களில் சிறந்த பாடல், தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும்.
சிறந்த பாடலுக்கு 50,000 ரூபாய் மற்றும் கேடயம் வழங்கப்படும்.
பாடலின் 'ஹாட் காப்பி'யை, சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா., நெடுஞ்சாலையில் உள்ள, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநருக்கு, தபால் மற்றும் 'கூரியர்' வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும்.
பாடலின் 'சாப்ட் காப்பி'யை, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு, வரும் மே மாதம் 30ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

