/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
/
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜன 18, 2024 01:58 AM

மேல்மருவத்துார்:ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ், , வழங்கினர்.
மேல்மருவத்துார், ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில், பங்காரு அடிகளார் 84வது பிறந்தநாள் விழா, பாரதியார் 142வது பிறந்தநாள் விழா, சுவாமி விவேகானந்தரின் 161வது பிறந்தநாள் விழா மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விழாவையொட்டி, விளையாட்டு போட்டிகள், ஆதிபராசக்தி மருத்துவக் கல்லுாரி ஜி.பி., மாநில அளவிலான விளையாட்டு மைதானத்தில், நேற்று, நடந்தது.
இதில், ஓட்டபந்தயம், கபடி, கைப்பந்து, குண்டு எறிதல், உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை, மேல்மருவத்துார் ஊராட்சி துணைத் தலைவர் அகத்தியன் துவக்கி வைத்தார்.
இதில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டிகளில் வெற்றி வெற்றவர்களுக்கு, ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் அன்பழகன் பங்கேற்று, கோப்பை, ரொக்க பரிசுகள் ஆகியவற்றை வழங்கினார். மதுரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சரளா, லிங்கநாதன், கோபி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.