/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேர்களைத் தேடி திட்ட சுற்றுலா:வெளிநாட்டு தமிழ் இளைஞர்கள், மாமல்லபுரம் சிற்பங்களை கண்டு களிப்பு

ADDED : ஆக 02, 2025 11:38 PM

மாமல்லபுரம்:வேர்களைத் தேடி திட்ட சுற்றுலாவாக, வெளிநாட்டு தமிழ் இளைஞர்கள், மாமல்லபுரம் சிற்பங்களை கண்டு ரசித்தனர். வெளிநாடுகளில் வசிக்கும், இன்றைய தலைமுறை தமிழ் இளைஞர்கள், தமிழக கலாசாரம், கலைகள், பண்டைய சரித்திரம் உள்ளிட்டவை குறித்து அறிவதற்காக, தமிழக அரசு வேர்களைத் தேடி திட்டம் செயல்படுத்துகிறது. அதன்படி, வெளிநாட்டு பள்ளி, கல்லுாரிகளில் படிக்கின்ற மாணவ - மாணவியரில், ஆண்டிற்கு 100 பேரை தேர்வு செய்து, தமிழகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
தற்போதும் ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, மலேசியா, மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து, தமிழகம் வந்துள்ள 100 பேர், நேற்று மாமல்லபுரம் வந்தனர். திருக்கழுக்குன்றம் தாசில்தார் வாசுதேவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இங்குள்ள பல்லவர் கலைச்சிற்பங்களை கண்டு ரசித்த அவர்கள், அவற்றை பற்றிய சரித்திர விபரங்கள் அறிந்து வியந்தனர். சிற்ப பின்னனியில், தனியாக, குழுவினராக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தமிழக பாரம்பரியத்தை போற்றினர்.
தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, இக்குழுவினர் தொடர்ந்து சுற்றுலா செல்கின்றனர். தமிழக பண்பாடு, கலைகள், இலக்கியம், பாரம்பரிய தொழில்கள், நீர் மேலாண்மை உள்ளிட்டவை குறித்து, அவர்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி, அறிஞர்களுடன் கலந்துரையாட வைப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.