/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ய வைத்த வாலிபருக்கு 'காப்பு'
/
பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ய வைத்த வாலிபருக்கு 'காப்பு'
பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ய வைத்த வாலிபருக்கு 'காப்பு'
பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ய வைத்த வாலிபருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 04, 2025 10:30 PM
மறைமலை நகர்:'இன்ஸ்டாகிராம்' நட்பால் ஏற்பட்ட நெருக்கத்தில் பெண்ணை கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்ய வைத்த வாலிபரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, 25 வயது பெண், தன் கணவரிடம் விவாகரத்து பெற்று, சிங்கபெருமாள் கோவில் பகுதியில் தங்கி, மகேந்திரா சிட்டி பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த ராகுல், 21, என்பவருக்கும்,'இன்ஸ்டாகிராம்' மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின், ஒரகடம் பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் ராகுல் வேலைக்குச் சேர்ந்த போது, இருவரும் சந்தித்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
இதில் கர்ப்பமடைந்த அப்பெண், திருமணம் செய்து கொள்ளும்படி ராகுலிடம் கேட்டுள்ளார்.
இதற்கு ராகுல், கர்ப்பத்தை கலைத்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூற, அவரும் தனியார் மருந்தகத்தில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு, கர்ப்பத்தை கலைத்து உள்ளார்.
இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அப்பெண், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து, மருத்துவர்கள் அளித்த தகவலின்படி விசாரணை நடத்திய மறைமலை நகர் போலீசார், அப்பெண்ணிடம் புகார் பெற்று, ராகுலை நேற்று முன்தினம் மாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.