/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குட்கா விற்றவருக்கு 'காப்பு'
/
குட்கா விற்றவருக்கு 'காப்பு'
ADDED : நவ 15, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி ஜி.எஸ்.டி., சாலை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, சிங்கபெருமாள் கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த கடையில் சோதனை செய்த போலீசார், அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 10,000 ரூபாய் மதிப்பிலான 4.5 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, கடையின் உரிமையாளரான சுறா குமார் என்ற ரவிக்குமார்,38, என்பவரை, போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்குப் பின், அவரை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

