/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையை சீரமைக்க கோரி குரோம்பேட்டையில் போராட்டம்
/
சாலையை சீரமைக்க கோரி குரோம்பேட்டையில் போராட்டம்
ADDED : ஜூலை 27, 2025 08:58 PM
குரோம்பேட்டை:குரோம்பேட்டை, ஆஞ்சநேயர் கோவில் தெரு சாலையை சீரமைக்க வலியுறுத்தி, நேற்று போராட்டம் நடந்தது.
தாம்பரம் மாநகராட்சி, 36வது வார்டு குரோம்பேட்டை, நேரு நகரில், ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் பாதையை, பக்தர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்த சாலை சேதமாகி, குண்டும் குழியுமாக இருப்பதால், அந்த வழியே செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மேலும், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும், சாலை சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில், ஆஞ்சநேயர் கோவில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், சமூக ஆர்வலர் சந்தானம் தலைமையில், நேற்று போராட்டம் நடந்தது.
இதில், குடியிருப்புகளில் வசிப்போர், மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் பங்கேற்று, மாநகராட்சியை கண்டித்து கோஷம் எழுப்பினர்.